மும்பை, சென்னை துறைமுகங்கள் மற்றும் மின்விநியோக நிலையங்களை குறிவைத்து சைபர் தாக்குதலுக்கு சீனா சதி
மும்பை சென்னை நகரங்களில் துறைமுகங்களையும் பத்து மின் விநியோக நிலையங்களை குறிவைத்தும் சீனா சைபர் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரெட் எக்கோ என்ற சீனத் தொடர்புடைய ஒரு அமைப்பு இத்தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
லடாக்கில் பதற்றம் நீடித்த போது இந்தியாவின் பெரு நகரங்களின் மீது சைபர் தாக்குதல் நடத்தவும் ஹேக்கிங் மூலம் மின் விநியோகத்தைத் தடை செய்து இருட்டடிப்பு செய்யவும் சீனா திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனை அமெரிக்காவின் மசாச்சூசட்ஸ் நகரில் இயங்கும் ஒரு தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
Comments