”ஓடிடி தளங்கள் அரசிடம் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை” - அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
ஓடிடி தளங்கள் அரசிடம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஓடிடி பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது சுய சார்பு தளமாக விளங்கும் ஓ.டி.டியில் அரசு பிரதிநிதி யாரும் இடம் பெற வாய்ப்பில்லை என பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்தார்.
கடந்த மாதம் 25ம் தேதி மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டிஜிட்டல் மீடியாவுக்கான வழிகாட்டல் விதிகளை வெளியிட்டது. அப்போது ஓடிடி தளங்கள் சுய சார்புடன் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் உள்ளடக்கம் குறித்து தாங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று வயது வாரியாக 5 பிரிவுகளில் ஓடிடி தளங்கள் செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாச, வன்முறை காட்சிகளுக்கு ஏ பிரிவு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆபாசம் வன்முறையைக் கட்டுப்படுத்த அரசு தனி அதிகாரியை நியமிக்க உள்ளதாக வந்த வதந்திகளுக்கும் நேற்றைய கூட்டத்தில் பிரகாஷ் ஜவடேகர் முற்றுப்புள்ளி வைத்தார்.
Comments