டாப்சி, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் அலுவலகங்களில் வருமான வரி சோதனை; ரூ.300 கோடிக்கு மேல் வருவாய் மறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்

0 5770
நடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை; ரூ.300 கோடிக்கு மேல் வருவாய் மறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல்

டிகை டாப்சியின் மும்பை இல்லம், இயக்குனர் அனுராக் காஷ்யாப் படநிறுவனம் உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் மறைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மும்பை, புனே, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள படத்தயாரிப்பு அலுவலகங்கள், திரைப்பட கலைஞர்களைத் தேர்வு செய்யும் திறன் தேர்வு நிறுவனங்கள் ஆகியவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டன.

நடிகை டாப்சி படத்தில் நடிக்க ரொக்கமாக 5 கோடி ரூபாய் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அனுராக் காஷ்யப்பின் ஃபாந்தம் பிலிம்ஸ் phantom films படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் சில பாலிவுட் படத்தயாரிப்பு நிறுவனங்களில் பொய்யான செலவு கணக்குகளுடன் போலி பில்கள் தயாரித்து வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments