செக் மோசடி வழக்குகளுக்குத் தீர்வு காண கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கலாம்; நீதித்துறையின் மீதான சுமையைக் குறைக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
செக் மோசடி வழக்குகளை விசாரிக்க கூடுதலான நீதிமன்றங்களை அமைக்க தனிச்சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் நிதி சேவைத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இது ஒரு தீர்வு என்று அரசு ஏற்கவில்லை.
138 பிரிவின் கீழ் குவிந்து கிடக்கும் வழக்குகளுக்குத் தீர்வு காண கூடுதல் நீதிமன்றங்களை ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்து அமைக்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
கீழ் நீதிமன்றங்களிலும், உயர் நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளில் 30 சதவீதம் செக் மோசடி வழக்குகளே என்றும் இவற்றுக்குத் தீர்வு காண அவசரமாக நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
Comments