அரசு வெளியிட்ட புதிய வழிமுறைகளுக்கு ஓ.டி.டி.துறையினர் வரவேற்பு -அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர்
OTT தளங்கள் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வழிகாட்டல்களை அந்த துறையை சார்ந்தவர்கள் வரவேற்றுள்ளனர் என செய்தி-ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.
இந்த தளங்கள் வாயிலாக ஒளிபரப்பாகும் படங்கள் மற்றும் தொடர்களால் சிறந்த அனுபவங்களை மக்களுக்கு வழங்க தாங்கள் ஒத்துழைப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்று பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.
OTT மற்றும் சமூகதளங்களில் வெளியாகும் கன்டன்டுகளை கண்காணிக்க கடந்த வாரம் புதிய வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்டன.
Comments