இந்திய அளவில் வாழச் சிறந்த நகரங்களின் தரவரிசையில் சென்னைக்கு 4 ஆம் இடம், கோவைக்கு 7 ஆம் இடம்..!

0 26832
இந்திய அளவில் வாழச் சிறந்த நகரங்களின் தரவரிசையில் சென்னைக்கு 4 ஆம் இடம், கோவைக்கு 7 ஆம் இடம்..!

ந்திய அளவில் வாழ்க்கை நடத்த உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை நான்காமிடத்தையும், கோவை ஏழாமிடத்தையும் பெற்றுள்ளன.

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் கல்வி, நலவாழ்வு, வீட்டு வசதி, உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வாழ்க்கை நடத்த உகந்த நகரங்களின் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

பத்து இலட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பெங்களூர், புனே, அகமதாபாத் ஆகியன முதல் மூன்று இடங்களில் உள்ளன. தமிழகத்தின் சென்னை நான்காமிடத்திலும், கோவை ஏழாமிடத்திலும் உள்ளன.

பத்து இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட நகரங்களில் சிம்லா முதலிடத்திலும் புவனேஸ்வரம் இரண்டாமிடத்திலும் உள்ளன. தமிழகத்தின் சேலம், வேலூர், திருச்சி ஆகியன முறையே 5, 6, பத்தாமிடங்களில் உள்ளன.

பத்து இலட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறப்பான செயல்பாடுள்ள மாநகராட்சிகளில் தமிழகத்தின் சேலம், திருப்பூர், திருநெல்வேலி ஆகியன முறையே 5, 6, பத்தாமிடங்களில் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments