2020 - 2021 நிதி ஆண்டில் இபிஎப்ஒ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 8.5 சதவீதமாகவே நீடிக்கும்- மத்திய வரிகள் வாரியம் அறிவிப்பு

0 2273
2020 - 2021 நிதி ஆண்டில் இபிஎப்ஒ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி 8.5 சதவீதமாகவே நீடிக்கும்- மத்திய வரிகள் வாரியம் அறிவிப்பு

டப்பு நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி 8.5 சதவீதமாகவே நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வரிகள் வாரியத்தின் இந்த அறிவிப்பு 6 கோடி சந்தாதாரர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு ஏராளமானோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டதால், டிசம்பர் வரையிலான காலகட்டம் வரை சுமார் 2 கோடி பேர் இபிஎப்ஒ கணக்கில் இருந்து 73 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments