அதிமுக - தமாகா இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை ; இரண்டாம் கட்டமாக இரு கட்சித் தலைவர்களும் கருத்து பரிமாற்றம்
அதிமுக - தமிழ் மாநில காங்கிரஸ் இடையேயான 2-வது கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
எம்.ஆர்.சி.நகரிலுள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வகையில் 12 இடங்களை ஒதுக்க தமாகா அதிமுகவிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், தமாகாவுக்கு 3 முதல் 5 இடங்கள் மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையானது நடைபெற்றது.
Comments