பறந்து செல்ல முடியாத 'பஞ்சாப் ரஃபேல்' வாகனம்
இந்திய விமானப்படையில் உள்ள ரபேல் போர் விமானத்தின் மீதான ஈர்ப்பால் பஞ்சாப்பை சேர்ந்த கட்டட கலைஞர் ராம்பால் என்பவர் ஜெட் வடிவிலான வாகனத்தை வடிவமைத்துள்ளார்.
'பஞ்சாப் ரஃபேல்' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த வாகனம் பார்ப்பதற்கு விமானம் போலவே தோற்றமளிக்கிறது.
சுமார் 3 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள பஞ்சாப் ரஃபேல்,மணிக்கு 15 முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.
வாகனத்தின் முன்பகுதியில் ’ராம் பால் ஏர்லைன்ஸ்’ என எழுதப்பட்டுள்ளது.
விமானத்தில் பறக்க வேண்டும் என்ற கனவு இருந்தும் பொருளாதார சூழ்நிலையால் அதனை அனுபவிக்க முடியாத மக்களுக்கு விமானத்தில் செல்வதுபோன்ற உணர்வை ஏற்படுத்தவே இத்தகைய முயற்சியை மேற்கொண்டதாக ராம்பால் தெரிவித்துள்ளார்.
Comments