தமிழகம் முழுவதும் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடைகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை

0 118050
தமிழகம் முழுவதும் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடைகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை

பிரபல நகை விற்பனை நிறுவனமான லலிதா ஜுவல்லரி தொடர்புடைய 25 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னையில் தியாகராய நகர், அண்ணா நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை ஆகிய இடங்களிலும், திருச்சி, மதுரை, கும்பகோணம் மற்றும் புதுவை உள்ளிட்ட இடங்களில் 15 விற்பனை கிளைகளிலும், கார்பரேட் அலுவலகம், உரிமையாளர் வீடு என மொத்தம் 25 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

குறைந்த சேதாரத்தில் நகைகள் விற்பனை என விளம்பரப்படுத்தி வந்த லலிதா ஜூவல்லரியில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் கணிணி, ஹார்டு டிஸ்கில் உள்ள முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வரவு, செலவு கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், விற்பனை செய்த நகைகள் குறித்த ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments