தலைவிரித்தாடும் லஞ்சம்: நன்னிலம் வட்டாட்சியர் லட்சுமி பிரபா அதிரடி சஸ்பெண்ட்!
திருவாரூர் அருகே லாரி ஓட்டுநரிடத்தில் 8,000 லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அதிரடியைக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாட்சியராக இருந்த லட்சுமிபிரபா பர்மிட் வாங்கி எம் சாண்ட் ஏற்றி சென்ற லாரியை மடக்கி , ஆர்.சி புத்தகத்தை கைப்பற்றி கொண்டு ரூ. 8000 லஞ்சம் வேண்டும் ஓட்டூனரிடம் கேட்டுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல.துறையிடம் குமார் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறையின்அறிவுறித்தல் படி, கடந்த 24 ஆம் தேதி திருவாரூர் கடைத்தெருவில் உள்ள தலைமை அஞ்சலகத்துக்கு சென்று லட்சுமிபிரபாவிடம் ரசாயனம் தடவிய பணத்தை குமார் கொடுத்தார்.
அப்போது , வட்டாட்சியரின் ஜீப் ஓட்டுநர் லெலின் வாலெண்டியராக வந்து தனக்கு ரூ. 2000 தர வேண்டுமென்று கட்டயாப்படுத்தி குமாரிடத்திலிருந்து வாங்கியுள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவலர்கள் வட்டாட்சியர் லட்சுமிபிரபாவையும், ஓட்டுநர் ர் லெலினை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். வழக்கு பதிவும் செய்தனர்.
ஜாமீனே கிடைக்காத வழக்கில் கைது செய்யப்பட்ட லட்சுமிபிரபா தன்னுடைய செல்வாக்கால் நீதிமன்றமே செல்லாமல் சொந்தபிணையில் வெளியே வந்து விட்டார். ஓட்டுநர் லெலினையும் விடுதலை செய்து விட்டனர்.
லஞ்சம் வாங்கிய இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தனர் . சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு பறிகு, லஞ்சம் வாங்கிய நன்னிலம் வட்டாட்சியர் லட்சுமிபிரபாவை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.
Comments