இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி: ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து கியரான் பொல்லார்டு அசத்தல்
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் கியரான் பொல்லார்டு ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து அணியின் வெற்றிக்கு அடிகோலினார்.
கூலிட்ஜில் நடந்த ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடியபோது நான்காவது ஓவரின் 2, 3, 4ஆவது பந்துகளில் இலங்கைப் பந்து வீச்சாளர் அகில தனஞ்சயா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் களமிறங்கிய கியரான் பொல்லார்டு, ஆறாவது ஓவரில் அகில தனஞ்சயா வீசிய ஆறு பந்துகளையுமே அடித்து சிக்சராக பறக்கவிட்டு ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
மொத்தம் 11 பந்துகளைச் சந்தித்த கியரான் பொல்லார்டு 38 ரன்களைக் குவித்துவிட்டு ஆட்டமிழந்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி 13 புள்ளி ஒரு ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த சாதனையை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் ஹெர்சல் கிப்சும், 20ஓவர் போட்டியில் இந்தியாவின் யுவராஜ் சிங்கும் ஏற்கெனவே செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.
Comments