மதுரை : தகாத உறவுக்கு தடையாக இருந்த இளைஞரை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்தவர் படுகொலை!

0 43813
வெட்டி கொலை செய்யப்பட்ட பிரிட்ஜ் பாஷா

தகாத உறவுக்கு தடையாக இருந்த இளைஞரை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரிட்ஜ் பாஷா மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மதுரை மகபூப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஷா. 10 ஆண்டுகளுக்கு முன்பு தகாத உறவுக்கு தடையாக இருந்த கள்ளக்காதலியின் மகனான கிருஷ்ணன் என்ற இளைஞரை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த வழக்கில் கைதானார். அப்போதிலிருச்து இவரை மக்கள் பிரிட்ஜ் பாஷா என்று அழைதது வந்தனர். இவர், மீது பல வழக்குகள் உள்ளன.  சிறையிலிருந்து வெளி வந்த பாஷா, மகபூப்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார்.  நேற்றிரவு கடையின் வாசலில் நின்று கொண்டிருந்த அவரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்தது. சம்பவ இடத்திலேயே பிரிட்ஜ் பாஷா ரத்த வெள்ளத்தில் பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற  எஸ் எஸ் காலனி காவல் துறையினர் உடல் கைப்பற்றி மதுரை  அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த  சம்பவம் குறித்து எஸ்.எஸ்.  நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்தில் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர் கள் ஆய்வு செய்து  தடயங்களை சேகரித்து சென்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments