கிராமப்புற மாணவர்கள் கல்வியின் பயனை அடையும் வகையில் புதிய தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் - பிரதமர் மோடி உறுதி
கிராமப்புற மாணவர்கள் மொழி வாரியான மாநில தடைகளைக் கடந்து கல்வியின் பயனை அடையும் வகையில் தேசியக் கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நிகழச்சி ஒன்றில் காணொலி வாயிலாகப் பேசிய பிரதமர் மோடி ஒவ்வொரு மொழியிலும் அறிவியல், கலாச்சாரம், மருத்துவம், தொழில்நுட்பம், மேலாண்மை, விண்வெளி ஆய்வு, போன்ற துறைகளில் மிகச்சிறந்த உள்ளடக்கம் கொண்ட பாடங்களை கல்வித் துறை நிபுணர்கள் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நம் நாட்டில் திறமைகளுக்குப் பஞ்சமே இல்லை என்று சுட்டிக் காட்டிய பிரதமர், மொழித்தடையால் நமது கிராமப்புற ஏழை மாணவர்களின் திறமைகள் மங்கிப் போவதை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
Comments