ஒடிசா சிமிலிபால் தேசிய பூங்காவில் விடாமல் பற்றி எரியும் காட்டுத் தீ: தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள், வன ஊழியர்கள் தொடர் போராட்டம்
ஒடிசா சிமிலிபால் தேசிய பூங்காவில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
5 ஆயிரத்து 569 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பழமையான சிறுத்தைகள் சரணாலயத்தில் காட்டுத் தீ பற்றியது. ஒடிசா அரசு தரப்பில் 750 வனக் காவலர்கள், 40 பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் 240 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தீயை அணைக்கும் முயற்சியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments