தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: அ.தி.மு.க.-தி.மு.க. மும்முரம்
சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்க 8 நாட்களே உள்ள நிலையில், அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. கூட்டணிக் கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பதால் தொகுதிப் பங்கீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஏற்கனவே 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சி போட்டியிட விரும்பும் 23 தொகுதிகளின் உத்தேச பட்டியல் அதிமுகவிடம் வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜகவுடன் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகளுக்குள்ளும், பாஜகவுக்கு 24 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதிமுக - த.மா.கா. இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வகையில், 12 இடங்கள் ஒதுக்குமாறு அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. ஆனால், தமாகாவுக்கு 3 இடங்கள் மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments