கொரோனா தடுப்பூசியை மக்கள் 24 மணி நேரமும் செலுத்திக் கொள்ளலாம்: அமைச்சர் ஹர்ஷவர்தன்
கொரோனா தடுப்பூசியை மக்கள் 24 மணி நேரமும் செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தும் வகையில் நேரக் கட்டுப்பாடை நீக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தங்கள் வசதிகளுக்கு ஏற்ப 24 மணி நேரமும் தடுப்பூசியை போட்டுகொள்ளலாம் என்றும், பிரதமர் மோடி இந்தியர்கள் ஒவ்வொருவரின் நேரம் மற்றும் ஆரோக்கியத்தின் மீதும் மதிப்பைப் புரிந்துகொண்டுள்ளார் என்றும் ஹர்ஷவர்தன் பதிவிட்டுள்ளார்.
Comments