நடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் காஷ்யாப் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரி சோதனை

0 4491
நடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் காஷ்யாப் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரி சோதனை

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபல பாலிவுட் நட்சத்திரங்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

மேலும் பல முன்னணி நட்சத்திரங்களின் வீடுகளில் சோதனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசுக்கு எதிராகப் பேசுவோர் வீடுகளில் மட்டும் சிபிஐ , வருமான வரித்துறை ரெய்டுகள் நடப்பதாக எதிர்க்கட்சியினர் புகார் அளித்து வந்த நிலையில் நேற்று நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 

இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மது வர்மா, விகாஷ் பேல் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது  மும்பை மற்றும் புனே நகர்களில் உள்ள 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் இந்த வழக்கை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்து செல்லவும் வருமானவரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments