சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கு இன்று நேர்காணல்

0 2551
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கு இன்று நேர்காணல்

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது. திமுக சார்பில் 3வது நாளாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு வினியோகம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. இறுதி நாள் என்பதால், விருப்ப மனு அளிப்பதற்காக சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 சட்டமன்ற தேர்தல்களிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 8 ஆயிரத்து 240 விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெறுகிறது.

திமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது. 3வது நாளான இன்று தருமபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட உள்ளது. ஸ்டாலின் தலைமையிலான மூத்த நிர்வாகிகள் களநிலவரம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிகின்றனர்.

7-ம் தேதி தி.மு.க.வின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கூறப்படுகிறது. அன்றைய தினம் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments