அதிமுக - தமாகா இடையேயான முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ; 12 இடங்கள் ஒதுக்குமாறு தமாகா வலியுறுத்தல்

0 1669
அதிமுக - தமாகா இடையேயான முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ; 12 இடங்கள் ஒதுக்குமாறு தமாகா வலியுறுத்தல்

திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

தமாகாவின் தொகுதி பங்கீட்டு குழு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வகையில், 12 இடங்கள் ஒதுக்குமாறு தமாகா வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளார்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், இந்த தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாக கூறினார்.

இதனிடையே, தமிழ் மாநில காங்கிரஸுக்கு அதிமுக 3 இடங்கள் மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments