உலக செவித் திறன் தினம்-100 ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக ஹியரிங் எய்டு
உலக செவி திறன் தினத்தை முன்னிட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 10 லட்சம் ரூபாய் செலவில், செவிதிறன் குறைந்த 100 ஏழை குழந்தைகளுக்கு இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன.
இது தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய மருத்துவமனையின் இஎன்டி துறை தலைவர் கவுரிசங்கர், பிறவியில் நரம்பு குறைப்பாட்டால் செவித் திறன் இல்லாத குழந்தைகளுக்கு காக்லியர் இம்பிளண்ட் அறுவை சிகிச்சை ஸ்டான்லி மருத்துவமனையில் இலவசமாக செய்வதாக தெரிவித்தார். இதற்காக அரசு ஒரு குழந்தைக்கு ஆறரை லட்சம் ரூபாய் வழங்குவதாகவும், இதுவரை 20 குழந்தைகளுக்கு காக்லியர் இம்பிளாண்ட் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
Comments