பிளாட்டிபஸ்க்காக உருவாக்கப்படும் வாழ்விடம்..! அழிந்துவரும் இனத்தை காக்க ஆஸ்திரேலிய விலங்கியல் பூங்கா நடவடிக்கை
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள டரோங்கா விலங்கியல் பூங்காவில் பிளாட்டிபஸ்க்காக வாழ்விடம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
டாஸ்மானியா உட்பட கிழக்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் உயிரினம் பிளாட்டிபஸ். முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் பாலூட்டி வகை உயிரினமாகும்.
அழிந்துவரும் பிளாட்டிபஸ் இனத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்படும் சிறப்பு வாழிடம் 2022 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதில் 65 பிளாட்டிபஸ்கள் சுதந்திரமாக வாழ முடியும்.
Comments