தெலங்கானாவில் 40 துணை மின் நிலையங்களை முடக்க சீனா சதி?

0 3386
தெலங்கானாவில் 40 துணை மின் நிலையங்களை முடக்க சீனா சதி? மால்வேர்கள் மூலம் மின் விநியோகத்தை சீர்குலைக்க திட்டம் என தகவல்

தெலங்கானாவில் சுமார் 40 துணை மின் நிலையங்கள், சீன ஹேக்கர்களின் மால்வேரால் முடக்கப்படும் என்ற அச்சுறுத்தல் வந்துள்ளதாக மாநில மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் கடந்த அக்டோபர் மாதம் நிகழ்ந்த வரலாறு காணாத மின்வெட்டுக்கு சீனாவின் மால்வேர் சதியே காரணம் என புகார் கூறப்படுகிறது. ஆனால் அது தவறு என மத்திய எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், தெலங்கானா மாநில மின் விநியோக மையத்தின் கீழ் உள்ள துணை மின்நிலையங்களின் கணினிகளில் மால்வேர்கள் மூலம் ஊடுருவல் நடத்தி அவற்றை முடக்க சீனாவில் உள்ள சில விஷம அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதற்கு ஆதாரம் உள்ளதாக இந்திய கம்ப்யூட்டர் அவசரகால நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments