ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜாரகிகோலி ராஜினாமா

0 3998
ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜாரகிகோலி ராஜினாமா

பாலியல் புகார் சர்ச்சையில் சிக்கிய கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிகோலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மாநில நீர் ஆதாரத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ டேப் வெளியானதை தொடர்ந்து கர்நாடக அரசியல் வட்டாரத்தில் அனல் வீசுகிறது.

அரசுப் பணி தருவதாக கூறி குறிப்பிட்ட பெண்ணை அவர் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தினார் என்ற புகார் எழுந்து, பெங்களூரு காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோவுக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்துள்ள ரமேஷ், எனினும் தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments