வேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு! ரமேஷ் ஜர்கிஹோலியின் 'ஜாலி' வீடியோ வெளியான பின்னணி
வேலை கேட்டு வந்த பெண்ணை ஏமாற்றி படுக்கையில் வீழ்த்திய கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து எம்.எல்.ஏ பதவியில் இருந்தவர் ரமேஷ் ஜர்கிஹோலி. குமாரசாமி அமைத்த கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். கர்நாடக மாநிலத்தில் குமாராசாமி ஆட்சி கவிழ முக்கிய காரணமாகவும் இவர் இருந்தார். பின்னர் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பெலகாவி மாவட்டம் கோகாக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டுதான் கட்சி தாவியதால், முதல்வர் எடியூரப்பா அவருக்கு நீர்பாசனத்துறை அமைச்சர் பதவி வழங்கினார். சமீபத்தில் கூட தமிழக நதி நீர் இணைப்பு தொடர்பாக சில சர்ச்சை கருத்துகளை ரமேஷ் ஜர்கிஹோலி கூறியிருந்தார். இந்த நிலையில் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி பெண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ வெளியானதால் சர்ச்சை வெடித்தது. மக்கள் பிரதிநிதியான இவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கு கூடாது. அவர் மீது கட்சி ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் தினேஷ் கல்லப்பா என்பவர் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்திடம் புகார் அளித்துள்ளார். அதில் மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு, மக்கள் பணியாற்றவேண்டிய நிலையில் பெண் ஒருவருடன் அமைச்சர் ஜாலியாக இருந்துள்ளார். இது மக்கள்விரோத செயலாகும். எனவே , அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் தினேஷ் கல்லப்பா தரப்பு கூறுகையில், '' அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியுடன் நெருக்கமாக இருக்கும் பெண், அரசு வேலைக்கேட்டு அவரை தொடர்பு கொண்டுள்ளார். வேலை வாங்கி தருவதாக அமைச்சர் பெண்ணுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவ்வப்போது , தன் ஆசைக்கு இணங்கினால் வேலைக்கு கிடைக்கும் என்று அந்த பெண்ணை படுக்கையில் வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து, அந்த பெண்ணுடன் அமைச்சர் நெருக்கமாக இருந்துள்ளார். வேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண்ணை பெண்ணை அமைச்சர் புறக்கணித்துள்ளார். வேலையும் வாங்கி கொடுக்கவில்லை என்கின்றனர்.
மேலும், இதனால், அதிருப்தியடைந்த பெண், அமைச்சரிடம் வேலை குறித்து கேள்வி கேட்டுள்ளார். அப்போது, இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் அமைச்சரிடத்தில் அந்த பெண் கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த அமைச்சர், அந்த வீடியோவை வெளியிட்டால், உன்னையும் குடும்பத்தையும் கொன்று விடுவேன் என்று மிரட்டியள்ளார். பயந்து போன பெண் அந்த வீடியோவை வெளியிடவில்லை. இறுதியாக தினேஷ் கல்லப்பாவை சந்தித்த பெண்ணின் குடும்பத்தினர், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க உதவ வேண்டுகோள் விடுத்து, வீடியோவையும் கொடுத்தனர் என்று தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து, மீடியாக்கள், சமூகவலைத்தளங்களில் வீடியோ வெளியானது.அப்போது, மைசூர் சாமுண்டிஸ்வரி கோயிலில் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். இந்த சமயத்தில் அமைச்சரின் ஆதரவாளர்கள் உத்தரவின் பேரில் கோகக் தொகுதியில் தொடர்ந்து மின்சார தடை ஏற்படுத்தப்பட்டதாகவும் கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. வீடியோ வெளியான தகவல் அமைச்சருக்கு கிடைத்ததும் சாமுண்டிஸ்வரி கோயிலில் இருந்து யார் கண்ணிலும் படாமல் தப்பிய அமைச்சர் தலைமறைவாகி விட்டார்.
தற்போது, அமைச்சர் ஜார்க்கோளி எங்கேயிருக்கிறார் என்பதே தெரியவில்லை. அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியை அமைச்சரவையிலிருந்து உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. அதே வேளையில், கர்நாடகத்தில் குமாரசாமி அரசு ஆட்சி கவிழ காரணமாக இருந்ததால் என்னை வீழ்த்த வேண்டுமென்று கருதி போலி வீடியோவை வெளியிட்டுள்ளனர். தான் ஒரு அப்பாவி என்று அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ரமேஷ் ஜர்கிஹோலி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Comments