வாடிக்கையாளர்கள் புகாரை அடுத்து டாடா நெக்சான் எலக்ட்ரிக் கார்களுக்கு வழங்கிய மானியம் நிறுத்தம்
வாடிக்கையாளர்களின் புகார் எதிரொலியாக டாடா நெக்சான் எலக்ட்ரிக் கார்களுக்கு வழங்கி வந்த மானியத்தை டெல்லி அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
டாடா நிறுவனத்தின் நெக்சான் எலக்ட்ரிக் கார், ஷோரூம் விலையாக 13 லட்சத்து 99 ஆயிரம் முதல் 16 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு முறை பேட்டரியை சார்ஜ் செய்தால், 312 கிலோ மீட்டவர் வரை பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, டெல்லி அரசு அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை மானியம் அளித்து வந்தது.
இந்த நிலையில் நிறுவனம் அறிவித்ததை விட பேட்டரியின் செயல்திறன் குறைவாகவே இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து எலக்ட்ரிக் வாகனத்திற்கான மானியத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கலாட் தெரிவித்துள்ளார்.
Comments