தொகுதி பங்கீடு.. திமுக கூட்டணியில் இழுபறி?

0 4268
திமுக கூட்டணியில் அமைந்துள்ள மதிமுக, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது

திமுக கூட்டணியில் அமைந்துள்ள மதிமுக, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது

கடந்த தேர்தலை சுட்டிக்காட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், தலா 10 அல்லது 12 தொகுதிகள் வரை கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்தே 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. தொகுதி உடன்பாட்டை சுமூகமாக முடித்துக் கொள்ள அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு தற்போது வரை திமுக நேரம் ஒதுக்கவில்லை என கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

திமுக - மதிமுக இடையேயான தொகுதி உடன்பாட்டிலும் இழுபறி நீடித்து வருகிறது. தனிச்சின்னத்தில் போட்டியிடும் வகையில், கட்டாயம் 10 தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என மதிமுக கேட்பதால், இழுபறி நிலை உருவாகியுள்ளது. திமுக தரப்பில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்திருப்பதாகவும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு இன்னும் திமுக அழைப்பு விடுக்காத சூழலில், அந்த பேச்சுவார்த்தையின் போதும் தனிச் சின்னத்தில் 10 தொகுதிகள் என்பதில் மதிமுக உறுதியாக இருக்கும் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

2011 தேர்தலை சுட்டிக்காட்டி திமுக கூட்டணியில் அமைந்துள்ள வி.சி.க. 10 தொகுதிகளை கேட்கிறது. ஆனால், அந்த தேர்தலில் போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் விசிக வேட்பாளர்கள் தோல்வியை தழுவியதால், இந்த தேர்தலில் 5 தொகுதிகள் மட்டுமே விசிகவுக்கு ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் குறைவான தொகுதிகளை ஒதுக்க திமுக நினைப்பதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 5 தொகுதிகளுக்காக கூட்டணி வேண்டாம் என்றும், தனித்தே போட்டியிடலாம் என்றும் விசிக நிர்வாகிகள் திருமாவளவனிடம் வலியுறுத்துவதாக கூறப்படும் நிலையில், திமுக - விசிக இடையேயான அடுத்த கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments