மேக்கப் போட சென்ற மணப்பெண் மாயம்... திருமணம் நின்றதால் நஷ்ட ஈடு கேட்கும் மணமகன்!

0 56826

பூந்தமல்லி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக மேக்கப் போடச் சென்ற மணப்பெண் தப்பி ஓடியதையடுத்து பெண் வீட்டார் நஷ்டஈடு வழங்க வேண்டும் என மாப்பிள்ளை வீட்டார் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்த வாலிபருக்கும், மதுராந்தகத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மத்தத்துடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் இறங்கினர். 

மார்ச் 2 ஆம் தேதி மாலை நசரத்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், மறுநாள் காலை திருமணமும் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், மணமகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மண்டபத்திதுக்கு வந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் பெண் வீட்டிலிருந்து மணப்பெண்ணும், பெண் வீட்டாரும் வராததால் சந்தேகமடைந்த மாப்பிள்ளை வீட்டார், அவர்களை தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளனர். 

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அழகு நிலையத்துக்கு  சென்ற மணப்பெண் மாயமாகி விட்டதாகவும், அவரை தேடி கொண்டு இருப்பதாக மணமகள் வீட்டார்  தெரிவித்தனர். இதனைக் கேட்ட மணமகன் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். மேலும் இந்த தகவலை பெண்வீட்டார் தாமதமாக தெரிவித்ததால் , திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரக்கூடிய உறவினர்களுக்கு தயார் செய்து வைத்திருந்த உணவுகள் எல்லாம் வீணாகிப் போனது.

இதனையடுத்து திருமண மண்டபத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பேனர்களை மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் கிழித்தெறிந்தனர். மதிருமண ஏற்பாடு செய்து நின்று விட்டதால் பெண்வீட்டார் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments