நகைக்கடைக்குள் புகுந்த 3 முகமூடி கொள்ளையர்கள்.. ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓட்டம்

0 1061
பீகார் மாநிலம், பாட்னாவில் நகைக்கடைக்குள் புகுந்த 3 முகமூடி கொள்ளையர்கள் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தனர்.

பீகார் மாநிலம், பாட்னாவில் நகைக்கடைக்குள் புகுந்த 3 முகமூடி கொள்ளையர்கள் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தனர்.

வாடிக்கையாளர்கள் முன்னிலையில் புகுந்த கொள்ளையர்கள், கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகையை பறித்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் ஜிஜேந்திர குமார் சிங், கொள்ளையர் ஒருவர் விட்டு சென்ற துப்பாக்கியை கைப்பற்றி மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments