வரும் மே மாதத்திற்குள் 142 நாடுகளுக்கு 23 கோடியே 70 லட்சம் தடுப்பூசிகள் விநியோகிக்க அஸ்ட்ராஜெனிகா - சீரம் நிறுவனம் திட்டம்
வரும் மே மாத இறுதிக்குள் 23 கோடியே 70 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை விநியோகம் செய்ய அஸ்ட்ராஜெனிகா மற்றும் சீரம் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
அஸ்ட்ராஜெனிகா மற்றும் சீரம் நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் அடுத்த 2 மாதங்களில் 142 நாடுகளுக்கு 23 கோடியே 70 லட்சம் தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் உலகின் முதல் நாடாக 6 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கிய மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
Comments