பசு கடத்தல் - லவ் ஜிகாத்தை தடுக்க மம்தா அரசு தவறி விட்டது - யோகி ஆதித்யநாத்

0 1392
பசு கடத்தலைத் தடுப்பதிலும், திருமணத்திற்காக மதம் மாறுவதைத் தடுப்பதிலும் மேற்கு வங்க அரசு தோல்வியடைந்து விட்டதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

பசு கடத்தலைத் தடுப்பதிலும், திருமணத்திற்காக மதம் மாறுவதைத் தடுப்பதிலும் மேற்கு வங்க அரசு தோல்வியடைந்து விட்டதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் மால்டா நகரில் நடந்த பேரணியில் பேசிய அவர், பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் பசுக் கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும் என்று கூறினார்.

ஒரு காலத்தில் நாட்டையே வழிநடத்திய மேற்கு வங்கம் தற்போது, சட்டவிரோதமான சூழ்நிலையை எதிர் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். திருமணத்திற்காக மதம் மாறுவதைத் தடுக்க உத்தரப்பிரதேசத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதையும் யோகி ஆதித்யநாத் சுட்டிக் காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments