அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு நாளை நேர்காணல்

0 1460
அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு நாளை நேர்காணல்

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நாளை ஒரே நாளில் நேர்காணல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமகவுடன் தொகுதி உடன்பாடு குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக மற்றும் பாஜகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் நாளை ஒரே நாளில் நேர்காணல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments