நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை இணையதளங்களில் பதிவேற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2309

மிழக நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோட்டில் பெரும்பள்ள ஓடையின் இரு புறமும் சுவர் எழுப்ப தடை கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. பெரும்பள்ள ஓடையில் நீரோட்ட பாதையில் குறுக்கீடு ஏற்படுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ள கூடாது என்றும், தடை ஏற்படுத்தும் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீர் நிலைகளின் செயற்கைக் கோள் புகைப்படங்களின் தொகுப்பை இணையதளங்களில் பதிவேற்றவும், அதனை தலைமைச் செயலாளருக்கும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments