5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம் பின்னர் நடைபெறும் - மத்திய அரசு தகவல்
5ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம் பின்னர் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மொபைல் போன் சேவைகளுக்கான அலைக்கற்றைகள் அதிர்வெண் அடிப்படையில், 7 வகையான தொகுப்பாக ஏலம் விடப்படுகின்றன என்றார்.
இவற்றின் மொத்த ஆரம்ப விலை 3 லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அவர், 5ஜி மொபைல் சேவைக்கு பயன்படும் 3 ஆயிரத்து 300 மெகா ஹெர்ட்ஸ் முதல் 3 ஆயிரத்து 600 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட ஸ்பெக்ட்ரம் பின்னாளில் ஏலம் விடப்படும் என்றார்.
Comments