சூடுபிடித்துள்ள தேர்தல் களம்..! வன்முறையை தவிர்க்க அரசியல் கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

0 1272
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உயர் நீதிமன்றம்  அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு வெளியிடும் விளம்பரங்களுக்கு தடை விதிக்க கோரி திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி அமர்வு இவ்வாறு கூறியது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விளம்பரங்கள் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதியோடு நிறுத்தப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தலைமை நீதிபதி அமர்வு முன்னர் இன்று  நடந்த விசாரணையின் போது, இது தொடர்பாக,கடந்த ஜனவரி 21-ஆம் தேதி திமுக அளித்த மனுவைப் பரிசீலித்து, ஒரு வாரத்திற்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments