உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவரானார் நைஜீரிய பெண்
உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக நைஜீரியாவின் முன்னாள் நிதியமைச்சரான நிகோசி ஒகோன்ஜோ இவெலா பதவியேற்றுக்கொண்டார்.
சர்வதேச நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், ஏற்றுமதி உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்காக சுவிட்சர்லாந்தில் உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவரை இந்த அமைப்புக்கு ஆண்களே தலைவராக இருந்த சூழலில், தற்போது முதன்முறையாக ஆப்பிரிக்க பெண் ஒருவர் பதவியேற்றுள்ளார்.
நிகோசி ஒகோன்ஜோவின் பதவிக்காலம் வரும் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் நிறைவடையும். நைஜீரியாவின் நிதியமைச்சராக இரண்டு முறை பணியாற்றியுள்ள நிகோசி, 25 ஆண்டுகளாக உலக வங்கியிலும் சேவையாற்றியுள்ளார்
Comments