அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட விரும்பும் 23 தொகுதிகள் எவை?
அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட விரும்பும் 23 தொகுதிகள் அடங்கிய பட்டியல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் சென்னை எம்ஆர்சி நகரிலுள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வந்துள்ளனர்.
பாமக போட்டியிட விரும்பும் 23 தொகுதிகள் அடங்கிய பட்டியலும் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் வேளச்சேரி, சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, திருப்போரூர், உத்திரமேரூர், குடியாத்தம், திருப்பத்தூர், வேப்பனஹள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு,வந்தவாசி, செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர், ஓமலூர்,மேட்டூர், பரமத்தி வேலூர், கீழ்வேளூர், குறிஞ்சிப்பாடி ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
பாமக கோரும் சட்டமன்ற தொகுதிகளில் சில தற்போது அதிமுக வசம் உள்ளன. இதே போல் பாமக விரும்பும் தொகுதிகள் சிலவற்றை பாஜகவும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே இது குறித்து அதிமுக, பாஜக, பாமக பிரதிநிதிககள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments