சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி உரிமம் பெற்ற துப்பாக்கிகளைக் காவல்நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல்
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டிச் சென்னையில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்போர் அவற்றை ஒப்படைக்கும்படி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் 2,700 பேர் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் வைத்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இந்தத் துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல்நிலையங்களில் ஒப்படைக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட 600 துப்பாக்கிகளை ஆயுத வைப்பறையில் பாதுகாப்பாக வைத்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தேர்தலையொட்டிச் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதேபோலக் காவல்துறைத் தலைமை இயக்குநர் அலுவலகத்திலும் தேர்தல் பிரிவு இயங்குகிறது.
Comments