செல்வராகவன் இயக்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்துக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம்

0 5752

செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்துக்கு  இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வரும் 5 ஆம் தேதி வெளியாகவிருந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி ரேடியன்ஸ் மீடியா மனுதாக்கல் செய்தத். அதில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் தயாரிப்பாளரான எஸ்கேப் ஆர்டிஸ்ட் தங்களுக்கு ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய் கடனாக வழங்க வேண்டும் என்றும், அந்த தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தும்வரை இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments