சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக இடையே பேச்சுவார்த்தை

0 4613

திமுக- பா.ஜ.க இடையே சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கி நடைபெற்று வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 10 நாள்களே இருக்கும் நிலையில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிக தொகுதிகளை பாஜக கேட்பதால் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை எம்ஆர்சி நகரிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக மற்றும் பாஜக பிரதிநிதிகள் இடையே மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பா.ஜ.க சார்பில் மாநில தலைவர் எல்.முருகன், மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments