தொகுதிக்கு 3 பறக்கும் படைகள், 3 கண்காணிப்புப் படைகள் அமைப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

0 1089
தொகுதிக்கு 3 பறக்கும் படைகள், 3 கண்காணிப்புப் படைகள் அமைப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

ட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிக்கு 3 பறக்கும் படைகள், 3 கண்காணிப்புப் படைகள் ஒரு வீடியோ பதிவுக் குழு, வீடியோ கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காகத் துணை ராணுவப் படையின் 330 அணிகளை அனுப்பும்படி மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே 45 கம்பெனிகள் வந்துவிட்டதாகவும்,  அடுத்த சில நாட்களில் 15 கம்பெனிகள் வர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவினக் கண்காணிப்புத் தொடர்பாக வருவாய்த் துறை, சுங்கத் துறை அதிகாரிகளுடன் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments