ராஜ்யசபா டிவி, லோக்சபா டிவி ஆகிய இரண்டும் ஒன்றிணைப்பு: சன்சாத் டிவி எனப் பெயர்
ராஜ்யசபா டிவி, லோக்சபா டிவி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து சன்சாத் டிவி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப லோக்சபா டிவியும், மாநிலங்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ராஜ்யசபா டிவியும் இருந்தன. இவற்றை ஒன்றிணைத்து சன்சாத் டிவி என்னும் பெயரில் புதிய தொலைக்காட்சி உருவாக்குவதற்கான நடவடிக்கை கடந்த ஆண்டு நவம்பரிலேயே தொடங்கியது.
இந்நிலையில் இரு தொலைக்காட்சிகளும் ஒன்றிணைக்கப்பட்டு சன்சாத் டிவி என்னும் பெயரில் புதிய தொலைக்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. சன்சாத் டிவியிலும் நாடாளுமன்றத்தின் இரு அவை நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப இரண்டு 24 மணி நேரச் சேனல்கள் செயல்படும் எனக் கூறப்படுகிறது.
Comments