பெரு நாட்டு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை : கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு
பெரு நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
அங்குள்ள மருத்துவமனைகளில் காணப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் திண்டாடி வருகின்றனர்.
மேலும் ஆக்சிஜனை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் சிலி மற்றும் ஈகுவடார் ஆகிய நாடுகளில் இருந்து ஆக்சிஜனை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் Francisco Sagasti தெரிவித்துள்ளார்.
Comments