சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பதிவு செய்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியிட்டது சிபிசிஐடி
பாலியல் புகாரில் சிக்கியுள்ள சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி பதிவு செய்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.
3 எஸ்பிக்கள்,ஆய்வாளர் , உதவி ஆய்வாளர் உட்பட 15 காவலர்கள்,டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு ஆதரவாக செயல்பட்டு, புகார் அளிக்க வந்த அந்த பெண் எஸ்பியை தடுக்க முயன்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. புகாரில் சிக்கியுள்ள அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
Comments