மும்பை மின்விநியோகத்தின் மீது சைபர் தாக்குதல் ?
மும்பை மீது சைபர் யுத்தம் தொடுக்கப்பட்டதாக அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையின் மின் தடை ஏற்பட்டது.
இது குறித்து மகாராஷ்ட்ரா சைபர் செல் போலீசார் ஒரு அறிக்கையை அளித்திருந்தனர்.
அந்த அறிக்கையை அடுத்து விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் விசாரணையின் முதல் கட்ட தகவலின்படி மும்பையை இருட்டடிப்பு செய்ய சைபர் தாக்குதல் முயற்சி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்தார்.
Comments