"கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் தூக்குதண்டனை விதிக்க முடிவு" - பஞ்சாப் அரசு அதிரடி
கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் மரண தண்டனை விதிக்க பஞ்சாப் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அமிர்தசரஸ், குர்தாஸ்பூர் மற்றும் டார்ன் தரன் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கள்ளச்சாராயம் பருகியதால் பல உயிர்கள் பறிபோன சம்பவத்தை அடுத்து பஞ்சாப் அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது.
இதற்காக அம்மாநில கலால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி, கள்ளச்சாராய வழக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது வாழ்நாள் சிறை விதிக்கப்படும். அத்துடன் 20 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
Comments