தேநீர் கடையில் டீ ஆற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை அருகே தேநீர் கடையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டீ ஆற்றினார்.
சட்டமன்றத் தேர்தலையொட்டி அமைச்சர் விஜயபாஸ்கர், தனது சொந்த தொகுதியான விராலிமலையில்,அதிமுகவிற்கு ஆதரவு திரட்டி வருகிறார். பிரச்சாரத்தின் போது, இலுப்பூரில் உள்ள சாலையோர தேநீர் கடைக்கு திடீரென சென்று, அமைச்சர் டீ ஆற்றினார்.
பின்னர் தான்
தயாரித்த தேநீரை, அங்கிருந்தவர்களுக்கு வழங்கிய அவர், அவர்களோடு தானும் தேநீர் அருந்தினார்.
Comments