”இந்தியாவிடம் இருந்து 20லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வாங்க திட்டம்” - நேபாள சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
இந்தியாவிடமிருந்து 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக நேபாளம் அறிவித்துள்ளது.
காத்மாண்டில் பேசிய அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஹ்ருதயேஷ் திரிபாதி, 55 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வரும் 7-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.
தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்காக இந்தியாவிடமிருந்து ஏற்கெனவே 10 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வாங்கியிருப்பதாகவும், முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
Comments