அலைக்கற்றை ஏலத்தில் ஒரே நாளில் 77 ஆயிரத்து 146 கோடி ரூபாய் வருவாய்..! இன்றும் ஏலம் தொடருமென அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

0 2566
இன்று ஸ்பெக்டரம் ஏலம் இறுதி செய்யப்பட வாய்ப்பு என தகவல்: ரூ. 4 லட்சம் கோடி வரை ஏலம் மூலம் நிதியைத் திரட்டுகிறது மத்திய அரசு

5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தொடங்கிய ஸ்பெக்ட்ரம் ஏலம் இன்று இறுதி செய்யப்பட உள்ளது.

4ஜி அலைகற்றை ஏல விற்பனை மூலம் 4 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முதல் நாளில் சுமார் 77 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் விற்பனை களை கட்டியது.

ஜியோ, ஏர்டெல், வோடோபோன், ஐடியா ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ள நிலையில் இன்று ஏலம் இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

5ஜி சேவைக்கான அலைகற்றை ஏலம் பின்னர் நடைபெறும் என்று அறிவிக்கப்படுள்ள நிலையில், இந்த ஏலத்திற்கு பின் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கும் என்றும், கட்டண உயர்வுக்கும் வழிவகுக்கும் என்றும் கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments