அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இரண்டு நாட்கள் குறைப்பு
சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவினர் போட்டியிடுவதற்கான விருப்ப மனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 ஆம் தேதி முதல் விருப்பமனுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டி, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் நாளைக்குள் விருப்பமனுக்களை பெற்று மாலை 5 மணிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென அறிவித்துள்ளனர்.
Comments